1. |
திட்டத்தின் பெயர் |
திருநங்கைகளுக்கான கல்விக் கனவுத் திட்டம் |
2. |
திட்டத்தின் நோக்கம் |
• திருநங்கைகளும் மற்றவர்களைப் போன்றே சமமாக உயர்கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை உறுதி செய்தல்.
• குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டு நிதிச் சுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத திருநங்கைகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல்.
• உயர்கல்வி உறுதி செய்வதன் மூலம் அவர்களின் திறமையை ஊக்கப்படுத்தி தனியார் மற்றும் அரசு துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகளை பெறச் செய்தல்.
• திருநங்கைகளுக்கு கல்விக்கான சம வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் அவர்களுக்கான சுய தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல்.
|
3. |
வழங்கப்படும் உதவி |
உயர்கல்வி பயிலும் திருநங்கைகள்/திருநம்பியர் ஆகியோருக்கு கல்வி மற்றும் இதரக் கட்டணம் வழங்குதல் |
4. |
திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள் |
• தமிழ்நாடு திருநங்கை நல வாரியத்தால் இணையதளம் மூலம் வழங்கப்படும் அடையாள அட்டை வைத்திருக்கும் திருநங்கை/திருநம்பி.
• தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பள்ளிக் கல்வியினை முடித்திருத்தல் வேண்டும்.
• தமிழ்நாடு அரசு/இந்தியஅரசு/ பல்கலைக்கழக மானியக் குழுவால் (UGC) அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் அதன் கீழ் செயல்படும் கல்லூரிகளில் உயர்கல்வி அதாவது ஐடிஐ, பட்டயம், பட்டப்படிப்பு, தொழிற்கல்வி, மருத்துவம், சட்டம், விவசாயம், வேளாண்மை போன்ற படிப்புகளில் இளங்கலை, முதுகலை, ஒருங்கிணைந்த முதுகலை படிப்பு மற்றும் முனைவர் பட்டம் வரையிலான அங்கீகரிக்கப்பட்ட அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கும் பொருந்தும்.
|
5. |
திட்டம் குறித்த விவரம் |
• உயர்கல்வி பயில உதவித் தொகை கோரும் விண்ணப்பங்களுக்கு திருநங்கை நல வாரியத்தின் வாரியக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்.
|
6. |
திட்டம் குறித்து வரப்பட்டுள்ள அரசாணை விவரம் |
அரசாணை (நிலை) எண். 25, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் (சந3(1)) துறை, நாள்.15.03.2024 |
7. |
விண்ணப்பிக்கும் முறை |
1. மாவட்ட சமூக நல அலுவலகம் மற்றும்
2. சமூக நல ஆணையரகம்
|
8. |
தொடர்பு கொள்ளும்
அலுவலர் முகவரி
|
மாவட்ட சமூக நல அலுவலர்
|
9. |
குறைபாடுகள் இருப்பின் தெரிவிக்க வேண்டிய அலுவலர்கள்
|
• மாவட்ட அளவில்
• மாவட்ட ஆட்சியர் / மாவட்ட சமூகநல அலுவலர்.
• மாநில அளவில்
•லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம்,
•காமராஜர் சாலை, சென்னை - 600 005.
தொலைபேசி எண். 044 – 24351885
|