Screen Reader Access    A-AA+
Menu

திருநங்கையர் நலன்

தமிழ்நாடு திருநங்கையர் நல வாரியம்
1. வாரியத்தின் குறிக்கோள் திருநங்கைகளுக்கான சமூக மற்றும் பொருளாதார உதவிக்கான நலத் திட்டங்களை வகுத்து செயல்படுத்துதல்.
2. வாரியத்தின் அமைப்பு திருநங்கையர் நல வாரியம் – திருநங்கைகளின் நலனைக் காப்பதற்கும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் மாண்புமிகு சமூக நலத் துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் 11 அலுவல்சார் உறுப்பினர்களையும், 13 அலுவல்சாரா உறுப்பினர்களையும் (12 திருநங்கைகள் மற்றும் 1 பெண்) கொண்ட திருநங்கையர் நல வாரியம் அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
திருநங்கைகளை கண்டறிய மாவட்ட அளவிலான குழு மாவட்ட ஆட்சித் தலைவர் - தலைவர்
- 3 அலுவல்சார் உறுப்பினர்கள்
- 1 திருநங்கை உறுப்பினர்
3. வழங்கப்படும் உதவிகள் • அடையாள அட்டைகள்
• உணவுப் பொருள் வழங்கும் அட்டைகள்
• வாக்காளர் அடையாள அட்டைகள்
• வீட்டுமனைப் பட்டாக்கள்
• மருத்துவ வசதிகள்
• இலவச வீட்டு வசதி
• கல்வி உதவித் தொகை
• திறன் வளர்க்கும் பயிற்சிகள்
• சுய உதவிக் குழுக்களுக்கு ஆதரவளித்தல்
• பொருளாதார செயல்பாட்டிற்கு ஆதரவளித்தல்
• குறுகிய கால தங்கும் இல்லங்கள்
4. தகுதிகள் • தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்
• தமிழ்நாடு திருநங்கையர் நல வாரியத்தினால் வழங்கப்படும் அடையாள அட்டை வைத்திருத்தல் வேண்டும்.
5. பெறும் உதவிகள் தேவையின் அடிப்படையில் அளிக்கப்படும்
6. தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் மாவட்ட சமூக நல அலுவலர்
7. குறைகள் இருப்பின் அணுக வேண்டிய அலுவலர் / குறை நிவர்த்தி அலுவலர் மாவட்ட அளவில்:
மாவட்ட ஆட்சித் தலைவர் /மாவட்ட சமூக நல அலுவலர்
மாநில அளவில்: சமூக நல ஆணையர்,
லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம்,
காமராஜர் சாலை, சென்னை - 600 005.
தொலைபேசி எண். 044 – 24351891.

ஆதரவற்ற திருநங்கைகளுக்கான ஓய்வூதியம் வழங்கும் திட்டம்
1. திட்டத்தின் பெயர் ஆதரவற்ற திருநங்கைகளுக்கான ஓய்வூதியம் வழங்கும் திட்டம்.
2. திட்டத்தின் நோக்கம் உடல் ரீதியாக உழைத்து சம்பாதிக்க இயலாத 40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற ஏழை திருநங்கைகளுக்கு உதவி புரிதல்.
3. அளிக்கப்படும் உதவிகள் திருநங்கை ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு ரூ.1,500 வீதம் ஓய்வூதியம் வழங்குதல் (வருவாய்த் துறை மூலமாக)
4. உதவிகள் பெறுவோர் ஆதரவற்ற 40 வயதிற்கு மேற்பட்ட ஏழை திருநங்கைகள்.
5. தகுதிகள் • 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
• திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருத்தல் வேண்டும்.
• உடல் ரீதியாக உழைத்து சம்பாதிக்க இயலாத திருநங்கையராக இருத்தல் வேண்டும்.
• குடும்ப உறுப்பினர்களாலோ அல்லது வேறு எந்த நபர்களாலோ உதவி பெறாத திருநங்கையராக இருத்தல் வேண்டும்.
6. தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் மாவட்ட சமூக நல அலுவலர்
7. குறைகள் இருப்பின் அணுக வேண்டிய அலுவலர் மாவட்ட அளவில்:
மாவட்ட ஆட்சித் தலைவர்/மாவட்ட சமூக நல அலுவலர்,
மாநில அளவில்:
சமூக நல ஆணையர்,
லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம்,
காமராஜர் சாலை, சென்னை - 600 005.
தொலைபேசி எண். 044 – 24351891
© 2021 Social Welfare and Women Empowerment Department
Visitor Count : TNSWD